Latestமலேசியா

நாட்டில் மலாய்க்கார மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே சீன ஆரம்பப் பள்ளி; முதல் வகுப்பிலும் அவர்களே ஆதிக்கம்

பஹாவ், நெகிரி செம்பிலான், மார்ச்-22, நெகிரி செம்பிலான் பஹாவில் உள்ள தேசிய வகை சீன ஆரம்பப் பள்ளியில் மொத்தமுள்ள 66 மாணவர்களில், 62 பேர் மலாய்க்காரர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அதுவும், முதலாமாண்டில் காலடி வைத்துள்ள அனைத்து 20 மாணவர்களும் மலாய்க்காரர்களே என்பதையும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

பஹாவ், பத்து கிக்கிர், ச்சீ சின் தேசிய வகை சீன ஆரம்பப் பள்ளியே இவ்வாண்டு அந்த வித்தியாசமான சூழலைப் பதிவுச் செய்திருக்கிறது.

இதையடுத்து நாட்டிலேயே மலாய்க்கார மாணவர்களை பெருவாரியாகக் கொண்டே ஒரே சீன ஆரம்பப் பள்ளியாக, இந்த SJK C Chi Sin திகழ்கிறது.

மலாய் மாணவர்களுக்கு சீன மொழியைக் கற்றுக் கொடுக்க அப்பள்ளி ஆசிரியர்கள் தனி கவனத்துடன் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதாக, பள்ளித் தலைமையாசிரியர் வோன் கியு நியூ சொன்னார்.

10 ஆண்டுகள் முன்பு வரை அப்பள்ளியில் மொத்தமாகவே 20 மாணவர்கள் தான் இருந்தனர்; ஆனால் அண்மைய சில ஆண்டுகளாக அப்பகுதி வாழ் மலாய் பெற்றோர்கள் அதிகளவில் தங்களது பிள்ளைகளை அந்தச் சீனப் பள்ளிக்கு அனுப்பத் தொடங்கியதாகத் தலைமையாசிரியர் குறிப்பிட்டார்.

சீன மொழியைக் கற்றுக் கொள்வதற்காகவும் ஏராளமான மலாய்க்காரப் பெற்றோர்கள் பிள்ளைகளை அப்பள்ளிக்கு அனுப்பி வருவதாகத் தெரிகிறது.

சீனப்புத்தாண்டு, நோன்புப் பெருநாள், Mooncake பண்டிகை உள்ளிட்ட விழாக்களும், மாணவர்களின் பெற்றோர்களுடன் இணைந்து அங்கு கொண்டாடப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!