Latestமலேசியா

நாட்டில் மிக அதிக விலையில் வீடுகள் விற்கப்படும் இடங்களின் பட்டியலில் கோலாலம்பூர் முதலிடம்

கோலாலம்பூர், மே 1 – நாட்டில் மிக அதிக விலையில் வீடுகள் விற்கப்படும் நிலையை கோலாலம்பூர் தொடர்ந்து தற்காத்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், கோலாலம்பூரில் மறு விற்பனை செய்யப்பட்ட வீடு விலையின் சராசரி விலை 8 லட்சத்து 1557 ரிங்கிட் என பதிவாகியிருக்கிறது.

புதிய வீடுகளின் விலை 7 லட்சத்து 8462 ரிங்கிட்டாகும். கோலாலம்பூருக்கு அடுத்த நிலையில், சரவாக், சபா மற்றும் ஜோகூரில் உள்ள வீடுகளின் விலை அதிக விலையில் இருப்பதாக குடியிருப்பு வீடுகளுக்கான விற்பனைச் சந்தை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

திரெங்கானுவில்தான், வீடுகளின் மறு விற்பனை விலை மிக குறைந்த விலையில் உள்ளது. அங்கு ஒரு சராசரி வீட்டின் விலை 2 லட்சத்து 93 ஆயிரத்து 714 ரிங்கிட்டாகும்.
அதற்கடுத்து, பேராக், கெடா மற்றும் பஹாங் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. புதிய வீடுகளின் விலை மலாக்காவில்தான் மிக குறைந்த விலையில் விற்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
2024ன் முதலாம் காலாண்டில் அங்கு விற்கப்பட்ட வீடுகளின் சராசரி விலை 3 லட்சத்து 5463 ரிங்கிட்டாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!