Latestமலேசியா

நாட்டில் முட்டை தட்டுபாடு; நாசி லெமாக்கிலும் முட்டை அளவு சிறியதாகிவிட்டது !

கோலாலம்பூர், பிப் 14 – நாட்டில் சாரசரி நாளொன்றுக்கு மக்கள், 3 கோடி கோழி முட்டைகளை உணவில் சேர்க்கின்றனர். அந்த கணக்கின்படி மொத்த மக்கட் தொகையில் கிட்டதட்ட ஒருவர் ஒரு கோழி முட்டையை உட்கொள்கிறார்.

இந்நிலையில், சந்தையில் கோழி முட்டையின் விலையை அரசாங்கம் உயர்த்தாவிட்டால், சந்தையில் கோழி முட்டைகளின் உற்பத்தி நாளொன்றுக்கு 30 லட்சம் வரை குறையுமென, மலேசிய மலேசிய கால்நடை பண்ணையாளர்கள் கூட்டமைப்பு கூறியிருக்கின்றது.

இதனிடையே, மலேசியர்கள் விரும்பி உண்ணும் உணவான, நாசி லெமாக் கூட, தற்போது சில இடங்களில் முட்டை இன்றி விற்கப்படும் நிலை உருவாகியிருக்கின்றது. முட்டை தட்டுப்பாடு நாட்டில் எந்தளவு மோசமாகியுள்ளதை என்பதையே அது நமக்கு தெளிவாகக் காட்டியிருக்கிறது .

கோழி வளர்ப்பில், பண்ணையாளர்கள் அதிகம் செலவு செய்வது கோழி தீவனத்திற்கே. நாட்டில் கோழி தீவனம் இறக்குமதி செய்யப்படும் நிலையில், அதன் விலை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் கோழி முட்டைகளின் உற்பத்தி செலவு உயர்ந்திருக்கிறது.

ஆனால், அரசாங்கம் அதிகபட்ச விலை திட்டத்தின் , A,B,C வகை கோழி முட்டைகளின் சில்லறை விலையை முறையே 44, 42, 40 சென்னாக நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், ஒரு கோழி முட்டைக்கான உற்பத்தி செலவினம் 36 சென்னிலிருந்து 38 சென் வரை உயர்ந்து, பண்ணையாளர்கள் சந்தையில் 39 சென்னுக்கு விற்றால், மொத்த வியாபாரிகளால் பெரிதாக லாபத்தை பார்க்க முடியாது.

லாபம் கட்டுப்படியாகாத போது முட்டைகளின் உற்பத்தியை பண்ணையாளர்கள் குறைத்துக் கொள்ளக் கூடும். இதனால் சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டு, அதனால் அதிகம் பாதிக்கப்படப் போகிறவர்கள் உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்களே.

கடைகளில் முட்டை தட்டுப்பாட்டினை சமாளிக்க, நாட்டின் சில பகுதிகளில், கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் முட்டைகளின் அளவைக் குறைத்துக் கொண்டிருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, காய்கறி,பேக்கட்டுகளில் விற்கப்படும் சமையல் எண்ணெய், ரொட்டி, போன்ற உணவுப் பொருளின் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அந்த பாதிப்பை மக்கள் இன்னும் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில், குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய புரத உணவாக விளங்கும் முட்டை கையிருப்பிலும் தட்டுப்பாட்டு ஏற்பட்டால், அடுத்து மக்கள் என்னதான் செய்வார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!