புத்ராஜெயா, ஏப்ரல் 8 – இவ்வாண்டு, பிப்ரவரியில், நாட்டில் வேலையின்மை விகிதம் 3.3 விழுக்காடாக பதிவான வேளை ; வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 67 ஆயிரமாக குறைந்துள்ளது.
அதே சமயம், கடந்த பிப்ரவரியில், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஆட்பலம் நிலைத்தன்மையுடன் காணப்பட்டது.
அதனால், தொழிலாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து நேர்மறையான போக்கு பதிவுச் செய்யப்படுவதால், வேலையின்மை சற்று குறைந்துள்ளதாக, புள்ளியியல் துறையின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஹமட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.
குறிப்பாக, தொழிலாளர்களின் எண்ணிக்கை மாதம்தோறும் முன்னேற்றகரமான சூழலை பதிவுச் செய்து வருகிறது.
கடந்த ஜனவரியில், ஒரு கோடியே 70 லட்சத்து ஐந்தாயிரமாக பதிவான நாட்டின் ஆட்பல எண்ணிக்கை ; 0.1 விழுக்காடு அதிகரித்து இம்மாதம் ஒரு கோடியே 70 லட்சத்து ஏழாயிரமாக பதிவுச் செய்யப்பட்டுள்ளதை உசிர் மஹிடின் சுட்டிக்காட்டினார்.