Latestமலேசியா

நாட்டில் 15 விழுக்காட்டினர் கோவிட் தடுப்பூசி போட்டுள்ளனர்

கோலாலம்பூர், ஜூலை 22 –  நாட்டில் இரு முறை முழுமையாக கோவிட்  -19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின்  விகிதம் ,  15 %  தாண்டியிருப்பதாக, சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கையில்,  லபுவானில்  அதிகமாக 68 விழுக்காட்டினரும்,  சரவாக்கில் 49. 4 விழுக்காட்டினரும்,   பெர்லிசில் 36. 5 விழுக்காட்டினரும்,   கிள்ளான் பள்ளத்தாக்கில்   22. 7 விழுக்காட்டினரும்,  நெகிரி செம்பிலானில் 21. 8 விழுக்காட்டினரும், கோவிட் தொற்றுக்கு எதிரான, நோயெதிர்ப்பாற்றலை பெற்றிருப்பதாக  அவர் கூறினார்.

இதனிடையே, நேற்று மட்டும் நாட்டில்  4 லட்சத்து 46 ஆயிரத்து  52 பேருக்கு கோவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!