Latestஉலகம்மலேசியா

நாட்டில் 24 மணி நேரத்தில் 5,671 பேருக்கு கோவிட்

கோலாலம்பூர், ஜூன் 10 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,671பேர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதன்வழி தொற்றின் பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 639, 562 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூரில் மட்டும் 1,510 பேர் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோலாலம்பூரில் 769 பேரும், சரவாக்கில் 631 பேரும் , நெகிரி செம்பிலானில் 593 பேரும், ஜோகூரில் 524 பேரும் கெடாவில் 309பேரும் பாதிப்புக்கு உள்ளாகினர். மலாக்காவில் 184 பேரும் பினாங்கில் 166 பேரும் பேராவில் 144 பேரும் பாகங்கில் 112 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!