Latestமலேசியா

தண்டவாளத்தில் நுழைந்த செம்பனை லோரியை மோதித் தள்ளியது KTMB இரயில் ; உயிர் இழப்பு எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை

ஜெராண்டூட், நவம்பர் 3 – ஜெராண்டூட் – குவாலா குராவுக்கு இடையில், தண்டவாளத்தில் பயணித்த செம்பனை லோரி ஒன்றை, KTMB இரயில் ஒன்று மோதி விப்பத்துக்குள்ளானது.

நேற்று மாலை மணி 5.30 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்ததை, ஜெராண்டூட் போலொஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஜமான் மாட் காமிஸ் உறுதிப்படுத்தினார்.

சம்பவத்தின் போது, DMU 04 KTMB இரயில், பத்து பயணிகளுடன் ஜெராண்டூட்டிலிருந்து, நெகிரி செம்பிலான், கெமாஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

சம்பட இடத்தை சென்றடைந்ததும், எதிர்பாரா விதமாக, வலது புறத்திலிருந்து லோரி ஒன்று தண்டவாளத்தில் நுழைந்தததை அடுத்து அவ்விபத்து நிகழ்ந்தது.

அதனால், 35 வயது இரயில் ஓட்டுனரும், அவரது 26 வயது உதவியாளரும் சிராய்வு காயங்களுக்கு இலக்கான வேளை ; பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவத்திற்கு பின், லோரி ஓட்டுனர் தப்பி ஓடி விட்டதால், அவரை சம்பவ இடத்தில் அடையாளம் காண முடியவில்லை என கூறப்படுகிறது.

அவ்விபத்தால், இரயிலிம் முன் கண்ணாடி உடைந்ததோடு, முன்புறத்தில் பழுது ஏற்பட்ட வேளை ; லோரி முற்றாக சேதமடைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!