Latestமலேசியா

நாட்டில் mpox பரிசோதனைக் கருவிக்கு அங்கீகாரம்; நிபுணர்கள் மட்டுமே கையாள அனுமதி

கோலாலம்பூர், ஆகஸ்ட் -30 – mpox எனப்படும் குரங்கம்மை நோய் தொற்றைக் கண்டறியும் பரிசோதனைக் கருவி மலேசியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

நாட்டில் mpox பரிசோதனைகளை மேலும் ஆக்ககரமாக மேற்கொள்ளும் வகையில், அக்கருவியின் பயன்பாட்டுக்கு மருத்துவ உபகரணங்களுக்கான அதிகாரத் தரப்பு MDA அனுமதி வழங்கியது.

எனினும் உரிமம் வைத்துள்ள மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட துறை சார் நிபுணர்கள் மட்டுமே அக்கருவியைக் கையாள முடியும்.

பொது மக்கள், கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவி போல இதை பயன்படுத்த இயலாது என MDA நிர்வாக இயக்குநர் Dr.முரளிதரன் தெரிவித்தார்.

மருந்தகங்கள், மளிகைக் கடைகள், அல்லது இணையம் வாயிலாகவோ எல்லாம் அதனை விற்கவோ வாங்கவோ முடியாது.

மீறினால் 2012 மருத்துவ உபகரணங்கள் சட்டத்தின் கீழ் அது குற்றமாகும் என முரளிதரன் சொன்னார்.

ஒருவேளை அக்கருவிகளை மருத்துவர்கள் கையாளாமல், பொது மக்கள் சொந்தமாகக் கையாண்டால், துல்லிதமற்ற முடிவுகள் கிடைக்கப் பெறலாம்.

அல்லது நோயும் பரவலாமென அவர் நினைவுறுத்தினார்.

mpox நோய் கண்டதன் சந்தேகத்தின் பேரில் இதுவரை 33 பேர் நாட்டிலுள்ள மருத்துவமனைகளை நாடியுள்ளனர்.

அவர்களில் 32 பேருக்கு அந்நோய்க் கிருமி தொற்றியிருக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

எஞ்சிய ஒருவர், ஆய்வுக் கூட அறிக்கைக்காகக் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!