கோலாலம்பூர், ஜன 5 – சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பதில் நிபுணர் என நம்பப்படும் ஆடவன் ஒருவனை சபா போலீசார் கைது செய்தனர். 57 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி நேற்று நண்பகல் இரண்டரை மணியளவில் கைது செய்யப்பட்டதாக Beaufort போலீஸ் தலைவர் Yusoff zaki Mat Yaacob தெரிவித்தார்.
சுடும் ஆயுதங்கள் தயாரிக்கும் பல்வேறு சாதனங்களும் அந்த நபரிடமிருந்த பறிமுதல் செய்யப்பட்டது. தமது வீட்டில் சொந்தமாக பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட அந்த ஆடவன் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.