புத்ரா ஜெயா, மே 6 – KADA எனப்படும் Kemubu விவசாய மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி உட்பட நான்கு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு கடுமையாக கருதுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு MACC அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
எந்தவொரு லஞ்ச ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம் போன்ற விவகாரத்தை துடைத்தொழிக்கும் அமலாக்க நிறுவனத்தின் முயற்சி தொடரப்பட வேண்டும் என்பதோடு அனைத்து நிலைகளிலும் அமைச்சு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. லஞ்சம் கேட்டது மற்றும் அதனை பெற்றது தொடர்பில் அரசாங்க நிறுவனத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன் தகவல்கள் வெளியாகின.