
கிள்ளான், பிப் 18 – திரைப்படங்களில் வருவதைப் போல் பட்டப் பகலில் கையில் பாராங் கத்தியிடன் முகமூடி அணிந்த நிலையில் ஒரு வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று அவ்வீட்டில் இருந்த நான்கு பெண்களை கட்டிப் போட்டு, அவர்களது வாய்களை மூடிய பின் அவ்வீட்டிலுள்ள அறைகளில் சூரையாடினர். 4,000 ரிங்கிட் ரொக்கம், 20,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஐந்து கை தொலைபேசிகளையும் கொள்ளையிட்ட பின் அந்த சந்தேகப் பேர்வழிகள் அங்கிருந்து அவசரம் அவசரமாக தப்பியோடிய காணொளி வைரலானது. . கிள்ளான் தாமான் பெட்டாலிங்கில் நேற்று மதியம் ஒரு மணியளவில் நடைற்ற அந்த கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண்மணி ஒருவர் காயம் அடைந்தார். இரண்டு மாடி கொண்ட அந்த வீட்டில் ஒரே குடும்பத்தை சேந்ந்த நான்கு பெண்களும் ஒரு ஆடவரும் தங்கியிருந்தபோது இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
முகமூடி மற்றும் கையுறை அணிந்திருந்த நான்கு கொள்ளையர்களும் புரோட்டோன் வாஜா காரில் வந்ததோடு பின் கதவு வழியாக அவ்வீட்டிற்குள் புகுந்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலவர் துணை கமிஷனர் Cha Hoong Fong கூறினார்.
அந்த கொள்ளையின்போது 45 வயது பெண் ஒருவரின் மூக்கில் சந்தேக பேர்வழி உதைத்ததோடு கட்டையினால் தாக்கி பாரங்கினல் தலையில் இடித்ததாகவும் கூறப்பட்டது. அந்த சந்தேகப் பேர்வழிகள் தப்பிச் சென்ற புரோட்டோன் வாஜா கார் கிள்ளான் , தாமான் டேசாவான் வீடமைப்பு பகுதியிலுள்ள ஒரு லோரோங்கில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுப் பிடிக்கப்பட்டது. அந்த சந்தேகப் பேர்வழிகளை தேடும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.