Latestமலேசியா

நான் அடுத்த பிரதமரா? வதந்திகளை மறுக்கும் ஹிசாமுடின்

கோலாலம்பூர், ஜூன் 11- அடுத்த பிரதமராக தாம் முன்மொழியப்படவிருப்பதாக வெளிவந்துள்ள வதந்திகளை அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரான ஹிசாமுடின் உசேய்ன் மறுத்தார். தமக்கு எதிரான அரசியல் சதித்திட்டமாககூட இந்த வதந்தி இருக்காலம். எனினும் வதந்திகளை தாம் பொருட்படுத்துவது கிடையாது என வெளியுறவு அமைச்சருமான ஹிசாமுடின் தெரிவித்தார்.

அடுத்த பிரதமராக தாம் நியமிக்கப்படலாம் என்றும் பெரிக்காத்தான் நேசனல் தேர்தல் இயக்குனர் முகமட் அஸ்மின் அலி துணைப்பிரதமராக இருப்பார் என the vibes இணையதள பதிவேட்டில் வெளியான தகவல் குறித்து கருத்துரைத்தபோது ஹிசாமுடின் இத்தகவலை வெயிளியிட்டார்.
வதந்திகளை நான் பொருட்படுத்துவதில்லை.

கோவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்து நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். துணைப் பிரதமர் பதவிக்கு ஹிசாமுடின் நியமிக்கப்படவிருப்பதாக அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக கூறிவருகின்றனர்.

இன்னும் சில மாதங்களில் முஹிடின் பதவி விலகவிருப்பதாகவும் அவருக்கு பதில் நாட்டின் 9ஆவது பிரதமராக ஹிசாமுடின் பதவியேற்பார் என அம்னோ உறுப்பினர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கு பேரரசர் அனுமதி வழங்கியிருப்பதாகவும் கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி அம்னோ கட்சிக்கு அப்பாற்பட்ட இதர தலைவர்களுக்கும்கூட ஹசாமுடின் பிரதமர் பதவியை ஏற்பதற்கு பேரரசர் இணக்கம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இது உண்மையில்லை என்றும் பேரரசர் இன்னமும் அனைத்து அரசியல் தலைவர்களுடனான சந்திப்பை நடத்தி முடிக்கவில்லையென அரண்மனைக்கு அணுக்கமான மற்றொரு தகவல் கூறின. தெரிவிக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!