Latestமலேசியா

நான் அம்னோ துணைத் தலைவர் ; எந்த நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட முடியும்

சிரம்பான், செப் 10 – எந்த நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்று நான் கூறியதில்லை ; நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தருணம் வந்து விட்டது என்று தான் நான் கூறியிருக்கின்றேன்; என குறிப்பிட்டிருக்கின்றார் அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மொஹமட் ஹாசான் ( Datuk Seri Mohamad Hasan).

அத்துடன் எந்த நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது என்பது எனது தேர்வு. ஏனென்றால் நான் அம்னோவின் துணைத் தலைவர். ஆகவே, எந்த தொகுதியிலும் நான் போட்டியிட முடியும்.

சிலர் ரெம்பாவ் தொகுதியில் நான் போட்டியிடலாமென வெளியில் பேசிக் கொள்கின்றனர். அந்த பேச்சால் எனக்கு எந்த கவலையும் இல்லையெனக் கூறியிருக்கின்றார் மொஹமட் ஹாசான்.

கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி, சுகாதார அமைச்சரான கைரி ஜமாலுடின், மொஹமட் ஹசான் ரெம்பாவ் தொகுதியில் போட்டியிட விரும்புவதால், தான் 15-வது பொதுத் தேர்தலில் அத்தொகுதியைத் தற்காத்து போட்டியிடப் போவதில்லை என கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!