
கோலாலம்பூர், பிப்ரவரி-4 – தாம் இன்னமும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் சட்டப்பூர்வமான மனைவியே என, டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சோர் கூறியுள்ளார்.
எனவே உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்ப வேண்டாமென அவர் எச்சரித்தார்.
தனது பெயரில் இயங்கும் ஒரு போலி facebook பக்கத்தில் இடம் பெற்றுள்ள தகவலை மறுத்த போது, அவர் அவ்வாறு சொன்னார்.
அதில், “Cik ரொஸ்மா பிந்தி மன்சோர், டத்தோ நஜீப்பின் முன்னாள் மனைவி” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த facebook தனக்குச் சொந்தமானது அல்ல என்பதை ரொஸ்மா தெளிவுப்படுத்தினார்.
அந்த போலி கணக்கின் Scrinshot-டையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தனக்கு ஒரே ஒரு அதிகாரப்பூர்வ facebook கணக்கு மற்றும் ஒரு Tik Tok கணக்கு மட்டுமே இருப்பதாக ரொஸ்மா மேலும் கூறினார்.