
சென்னை , பிப் 10 – நான் இறந்துவிட்டதாக வெளியானச் செய்தி முற்றிலும் பொய்யானது விஷமத்தனம் கொண்டது என தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர், இயக்குனர் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர் என பன்முக திறமைகொண்ட பிரபல நடிகர் நாசர் கண்டித்திருக்கிறார். நான் எப்போதும் போல் நலமாக இருக்கிறேன் என நடிகர் நாசர் வணக்கம் மலேசியாவிடம் விளக்கினார். 64 வயது நாசர் செங்கல்பட்டுவிலுள்ள தமது வீட்டில் இறந்துவிட்டதாக வெளியான தகவலில் சற்றும் உண்மையில்லை. தான் தற்போது வெளிப்புற படப்பிடிப்பில் இருப்பதாகவும் இன்று சென்னை திரும்பவுள்ளதாகவும் அவர் கூறினார். அதன் பின்னர் மேல் விளக்கம் தரவிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 35 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளதோடு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் நாசர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது