
Bangsa Johor ரின் தீவிர ஆதரவாளராக அனைவராலும் அறியப்பட்டாலும் தாம் முதலில் மலேசியர்தான் என கூறியுள்ளார் மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான் இப்ராஹிம்.
வெளிநாடுகளில் எப்போதும் தம்மை முதலில் மலேசியர் என்றே அவர் அடையாளப்படுத்திக் கொள்கிறார். நான் வெளிநாடுகளில் இருக்கும்போது நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என யாராவது கேள்வி கேட்டால் தாம் எப்போதும் மலேசியர் என்றே மறுமொழி கூறுவதாக சின் சியூ பத்திரிகைக்கு வழங்கிய நேர்க்காணலில் சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த நேர்க்காணலில் Bangsa Johor, அனைத்து இனங்களும் ஐக்கியம் மற்றும் ஒற்றுமையுடன் வாழ வேண்டிய அவசியம், ஜோகூரின் எதிர்காலம், மற்றும் மலேசியாவில் சீனாவின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசியிருக்கின்றார்.
ஜோகூரில் பல்வேறு இனங்கள் மற்றும் சமயங்கள் இருந்தாலும் Bangsa Johor கோட்பாட்டை சுல்தான் இப்ராஹிம் பெருமையாக கருதுகிறார். அனைத்து இனங்களையும் ஒன்றாகவே கருதும் அவர் சில அதிகாரப்பூர்வ நிகழ்களில் பல இனங்களையும் சேர்ந்த மக்கள் இணைந்து அமர்வதையும் ஊக்குவித்து வருகிறார். சீனப் பத்திரிகைக்கு அவர் நேர்க்காணல் வழங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.