
தமிழ்நாடு, செப்டம்பர் 19 – பரமத்தி வேலூரிலுள்ள, உணவகம் ஒன்றில் ஷவர்மா உணவை சாப்பிட்ட கலையரசி என்ற 13 வயது சிறுமி உயிரிழந்தார்.
உணவை உண்டு விட்டு வீடு திரும்பிய சில மணி நேரத்தில், அவர் படுக்கையில் இறந்து கிடக்க காணப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே உணவகத்தில் உட்கொண்ட அவரது குடும்பத்தார் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் இறுதியில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் இருநூறுக்கும் அதிகமானோர் உணவு உட்கொண்ட வேளை ; அதில் ஐந்து சிறார்கள், 16 மருத்துவ கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 43 பேர் பாதிக்கப்பட்டதை, நாமக்கல் ஆட்சியாளர் டாக்டர் எஸ். உமா உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர்கள் அனைவரும் நாமக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளை ; சம்பந்தப்பட்ட உணவகம் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
நச்சுணவால் மரணம் விளைவித்த குற்றத்திற்காக, சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளரும், இரு சமையல்காரர்களும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாமக்கல்லில், ஷவர்மா விற்பனைக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.