
சிலாங்கூர்,ஜன 31 – குவாலா சிலங்கூரில், நாயை கட்டையால் அடித்து காயப்படுத்திய குற்றச்சாட்டை மறுத்து லோரி ஓட்டுனர் ஒருவர் விசாரணை கோரினார்.
41 வயது முஹமட் சைனால் மாட் டாஹாம் எனும் அந்த லோரி ஓட்டுனர், கட்டையால் தாக்கியதில் சம்பந்தப்பட்ட நாய் வலது கால்களில் காயத்திற்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி, இரவு மணி 8.30 வாக்கில், பண்டார் புஞ்சாக் ஆலாமிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் அவர் அக்குற்றத்தை புரிந்ததாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆயிரம் ரிங்கிட் முதல் ஒரு லட்சம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது மூன்றாண்டுகள் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
ஆறாயிரம் ரிங்கிட் உத்தரவாத தொகையில் முஹமட் சைனால் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.