Latestஉலகம்

நாய் ஆண்டில் பிறந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பம் செய்யாதீர்! சீன நிறுவனத்திற்கு கண்டனம்

பெய்ஜிங், ஆக 8 – நாய் ஆண்டில் பிறந்தவர்கள் வேலைக்கு மனுச் செய்தால் இயல்பாகவே நிராகரிக்கப்படுவார்கள் என்பதால் வேலைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என சீனாவில் விளம்பரம் செய்த நிறுவனத்தை பொதுமக்கள் சாடினர். சீனாவில் Guangdong வட்டாரத்தில் Guangzhou- வில் பெயர் குறிப்பிடாத நிறுவனம் அண்மையில் தனது நிர்வாக பிரிவுக்கு வேலைக்காக விளம்பரம் செய்தது. வேலை அனுபவத்தை கொண்டவர்களுக்கு 557 அமெரிக்க டாலர் சம்பளம் வழங்கப்படும் என்பது உட்பட வேலைக்கான இதர நிபந்தனைகளையும் அந்த நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது. எனினும் நாய் ஆண்டில் பிறந்தவர்கள் வேலைக்கு மனுச்செய்ய வேண்டாம் என வித்தியாசமாக செய்யப்பட்டிருந்த அந்த நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் எழுந்தது.

அந்த நிறுவனம் பாகுபாடு காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் குற்றஞ்சாட்டினார். நாய் ஆண்டில் பிறந்தவர்ளை வேலைக்கு வைத்துக்கொள்வதால் நிறுவனத்தின் வளர்ச்சி முட்டுக்கட்டையாக இருக்கும் என அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கருதியதால் தனது நிறுவனத்திற்கு நாய் ஆண்டில் பிறந்தவர்கள் வேலைக்காக மனுச் செய்யவேண்டாம் என்ற தகவலை அந்த விளம்பரத்தில் வெளியிட்டதாக கூறப்பட்டது. அந்த நிறுவனத்தின் விளம்பரத்திற்கு எதிராக சீன நாய் ஆண்டில் பிறந்தவர்கள் வழக்குத் தொடுப்பதற்கும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!