Latestமலேசியா

நாளை அம்னோ, மஇகா தலைவர்கள்  பேரரசரைச் சந்திக்கின்றனர்  

கோலாலம்பூர், ஜூன் 10  – இன்று இரண்டாவது நாளாக, பேரரசர் அல் சுல்தான் அப்துல்லாவுடன்  அரசியல் தலைவர்கள் சந்திப்பு நடத்தினர். இன்று கடைசியாக, சபா வரிசான் கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷாபி அப்டால், பேரரசரைச் சந்தித்தார்.

முன்னதாக,  பாஸ் கட்சியின் துணைத் தலைவர்  டத்தோ ஶ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான்,  மசீச கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர்  வீ கா சியோங், பெஜுவாங்கின் தலைவர் துன் டாக்டர் மகாதீர்  முஹம்மட் ஆகியோர் , பேரரசரிடம் தங்களது கருத்துகளை முன் வைத்தனர்.

நாளை, அம்னோ, மஇகா தலைவர்கள்  பேரரசரைச் சந்திக்கவுள்ளனர். அதைத் தொடர்ந்து,  திங்கட்கிழமை GPS சரவாக் கட்சி கூட்டணிகளின் தலைவர்களுடன் அல் சுல்தான் அப்துல்லா ,  இணையம் வாயிலாக  சந்திப்பை நடத்துவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!