கோலாலம்பூர், பிப் 10- நாளை தொடங்கி பள்ளிகளிலும் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் SOP முறை கட்டாயமாக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள், ஊழியர்கள், பிற வருகையாளர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பாக கட்டாயம் MySejahtera செயலியின் வாயிலாக QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ புத்தக்கத்தில் எழுதுவதன் மூலமாகவோ வருகை பதிவை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த விதிவிலக்கு அரசாங்கப் பள்ளிகளில் மட்டுமல்லாது, கல்வி அமைச்சின் கீழ் இடம்பெறாத அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.