கோலாலம்பூர், ஜன 8 – இந்தியாவின் பண்பாட்டு மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை
அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் வெளிநாட்டு விவகார அமைச்சும், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கூட்டுறவு நிறுவனம் (IRCTC) இணைந்து நாளை ஏற்பாடு செய்துள்ள பரவாசி பாரதியா எக்ஸ்பிரஸ் பயணத் திட்டத்தில் மலேசியாவைச் சேர்ந்த 12 பேர் உட்பட உலகளாவிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 156 பேர் பங்கேற்றுள்ளனர். 45 முதல் 65 வயதுடையவர்களுக்கான இத்திட்டத்தில் வெளிளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் தங்களது பரம்பரை வழித்தோன்றலோடு மீண்டும் இணைத்து இந்தியாவின் உண்மையான மேன்மையையும் அதன் பண்பாட்டு அழகையும் அனுபவிக்க முடியும்.
சிறப்பாகத் திட்டமிடப்பட்ட 14 இரவுகள் மற்றும் 15 நாட்கள் பயணம். டில்லி , அயோத்தி, பட்டினா, காயா, வாராணசி, மகாபலிபுரம், ராமேஸ்வரம், மதுரை, கொச்சி, கோவா, , அஜ்மேர், புஷ்கர் மற்றும் ஆக்ரா ஆகிய இடங்களுக்கு இந்த பயணத் திட்டத்தில் இடம்பெற்றவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இதனிடையே இதுபோன்ற பயணங்களை தொடர்ந்து ஏற்பாடு செய்யும்படி இந்திய அரசாங்கத்தை இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள பினாங்கை சேர்ந்த மஹாலிங்கம் கேட்டுக்கொண்டார்.