கோலாலம்பூர், மே 2 – நாளை மே 3 ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை
மே 5ஆம்தேதிவரை நடைபெறும் வட மண்டல Madani Rakyat 2024 திட்டத்தில் அமைச்சுகள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் 196 சேவைகளை வழங்கவிருக்கின்றன. பினாங்கில் Sungai Nibong Pesta பகுதியில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி நடைபெறும் இந்த நிகழ்வில் மக்களின் சமூக நலனை மேம்படுத்தும் முயற்சிக்கான MADANI அரசாங்கத்தின் புதிய கொள்கைகள் மற்றும் அமல்படுத்தும் முயற்சிகளை உள்ளூர் மக்கள் புரிந்துகொண்டு அதனை மதிப்பீடு செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தீபகற்பத்தின் பினாங்கு, கெடா மற்றும் பெர்லீஸ் ஆகிய மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய வட மண்டலத்திற்கான MADANI Rakyat 2024 திட்டத்தின் இரண்டாவது கட்ட நிகழ்சியை பினாங்கு அரசாங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சின் ஒத்துழைப்போடு பிரதமர்துறை அலுவலகமும் செயல்திறன் ஒருங்கிணைப்பு பிரிவும் ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரியும் வருகையாளர்கள் மக்களுக்கான சமூக நலன், ஒற்றுமை, TVET தொழிற்நுட்பம், தொழிற்கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பொது போக்குவரத்து துறைகளில் வழங்கப்படும் வசதிகளையும் அறிந்துகொள்ள முடியும். மேலும் 1,500 வேலை வாய்ப்புகள் குறித்த தகவலுடன் அரச மலேசிய போக்குவரத்து போலீஸ் குற்றப்பதிவுகளுக்கான 50 விழுக்காடு கழிவு வசதி மற்றும் JPJ எனப்படும் சாலை போக்குவரத்துத்துறை ஏற்பாட்டிலான 5,000 இலவச தலை கவசங்கள் ஆகியவையும் பெற்றுக்கொள்ளலாம்.