கோலாலம்பூர், ஏப் 9 – மலேசிய முஸ்லீம்கள் நாளை ஏப்ரல் 10 ஆம் தேதி புதன்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். அரச முத்திரை காப்பாளர் டான்ஸ்ரீ Syed Danial Syed Ahmad இதனை இன்றிரவு அறிவித்தார். நோன்பு பெருநாளுக்கான Syawal பிறை பார்க்கப்பட்டதை தொடர்ந்து நாளை நோன்பு பெருநாள் அறிவிப்பை அவர் வெளியிட்டார். மேலும் நாளை புதன்கிழமையும், வியாழக்கிழமையும் நோன்பு பெருநாள் பொது விடுமுறை அனுசரிக்கப்படும். வெள்ளிக்கிழமையன்று கூடுதலான பொதுவிடுமுறை இல்லையென இதற்கு முன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
Related Articles
Check Also
Close