Latestமலேசியா

நாளை பகாங்,ஜோகூரில் வெள்ளம் ஏற்படும்

கோலாலம்பூர், ஜன 24 – நாளை புதன்கிழமை ஜோகூரிலும் , பகாங்கிலும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக, நீர்ப்பாசன வடிகால் துறையின் வெள்ள கணிப்பு – மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது . ஜோகூர் பாருவிலுள்ள Kampung Kangkar Sungai Tiram பகுதியிலும், பகாங்கில் Rompin-னில் உள்ள Felda Selancar, Kampung Tanam , Kampung Rekoh Baru, மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.சம்பந்தப்பட்ட பகுதிகளில் கணிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் முன்கூட்டியே அல்லது தாமதமாகக் கூட வெள்ளம் ஏற்படலாம். எனவே இந்த எச்சரிக்கையை அடுத்து, பாதிக்கப்படும் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!