
புத்ரா ஜெயா, ஜன 31 – நாளை 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம்தேதி முதல் ஒரு மாதத்திற்கான குறைந்த பட்ச சம்பளம் 1,700 ரிங்கிட் அமலுக்கு வருவதைத் தொடர்ந்து சுமார் 4.37 மில்லியன் தொழிலாளர்கள் பயனடைவர்.
நாடு முழுவதிலும் அமல்படுத்தப்படும் இந்த குறைந்தபட்ச புதிய சம்பளத் திட்டம் ஐவருக்கும் கூடுதலான தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ள தொழில் நிறுவனங்கள் இந்த குறைந்த பட்ச சம்ளத்தை தங்களது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் முதலாளியால் பணியமர்த்தப்பட்ட தொழில் நிபுணத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் முதலாளிகளுக்கும் இந்த குறைந்தபட்ச சம்பளத் திட்டம் பொருந்தும்.
அதே வேளையில் , ஐந்துக்கும் குறைவான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு, 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி குறைந்தபட்ச சம்பள நடைமுறை அமலுக்கு வரும்.
இது முதலாளிகளுக்கு அந்தந்த நிறுவனங்களின் சம்பள அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய போதுமான அவகாசம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் என மனித வள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.