ஹைதராபாத், ஆகஸ்ட்-8 – தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார்.
ஹைதராபாத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் மட்டுமே பங்கேற்ற நிச்சயதார்த்தப் புகைப்படங்களை, நாக சைதன்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான நாகார்ஜூனா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
நாக சைதன்யா கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல நடிகையான சமந்தாவை திருமணம் செய்துக் கொண்டார்.
இளம் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த இருவரும் தனிப்பட்ட காரணங்களால் 2021-ல் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்து, நீண்ட காலமாகவே அதனை இரகசியமாக வைத்திருந்தனர்.
ஊடகங்கள் பல தடவை அதனை நோட்டமிட்டு செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில், இருவரும் இன்று நிச்சயம் செய்துக் கொண்டுள்ளனர்.