Latestமலேசியா

நிதியமைச்சராக அன்வார், அகமட் ஸாஹிட் ஹமிடி & பாடிலா யூசோப் துணைப் பிரதமர்கள்

புத்ரா ஜெயா, டிச 2 – புதிய அமைச்சரவை பட்டியலை எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை பட்டியலில் பிரதமர் அன்வாருடன் மொத்தம் 28 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் ஒரே இந்தியராக சிவக்குமார் வரதராஜூ நாயுடு மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் பதவியோடு நிதியமைச்சர் பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அன்வார் அறிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் இரண்டு புதிய துணைப்பிரதமர்களாக அம்னோவின் தலைவரான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி மற்றும் GPS எனப்படும் Gabungan Parti Sarawak கைச் சேர்ந்த பாடிலா யூசோப்பும் (Fadilah Yusof) நியமிக்கப்பட்டனர்.
அதே வேளை அகமட் ஸாஹிட் ஹமிடி கிராம மற்றும் வட்டார அமைச்சராகவும் , தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சராக பாடிலா யூசோப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையில் பொருளாதார அமைச்சர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அமைச்சராக பி.கே.ஆர் துணைத்தலைவர் ரபிசி ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்னோவின் துணைத்தலைவரான முகமட் ஹசான் தற்காப்பு அமைச்சராகவும் உள்துறை அமைச்சராக சைபுடின் நசுட்டியோன் இஸமாயில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
DAPயின் தலைமைச் செயலாளரான அந்தோனி லோக் போக்குவரத்து அமைச்சராகவும் , பேரா DAP தலைவர் ஙா கோர் மிங் மேம்பாடு மற்றும் ஊராட்சி மன்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக DAPயின் ஹனா இயோ பதவியேற்கவுள்ளார்.
விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சராக அமனா கட்சியைச் சேர்ந்த முகமட் சாபுவும், அக்கட்சியின் துணைத் தலைவரான சலாஹூடின் அயோப் உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கை செலவின அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கவுள்ளனர்.

பொதுப் பணி அமைச்சராக சரவாக் GPS கட்சியின் அலெக்ஸன்டர் நந்தா லிங்கி , அம்னோவின் உதவித் தலைவரான முகமட் காலிட் நோர்டின் உயர்க்கல்வி அமைச்சராகவும், அனைத்துலக வாணிப தொழியில் அமைச்சராக அம்னோவின் தெங்கு ஷப்ருல், அஷாலினா ஒத்மான் சட்ட மற்றும் சீரமைப்பு கழக அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறிவியல் தொழிட்நுட்பு அமைச்சராக Chang Lih Kang, மகளிர் ,குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சராக நன்சி சுக்ரி பதவியேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இயற்கை வளம், சுற்றுச் சூழல் ,பருவ நிலை மாற்றம் மீதான அமைச்சராக நிக் நஸ்மி நிக் அகமட், தொழில்முனைவர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு அமைச்சராக Ewon Benedick , வெளியுறவு அமைச்சராக ஷம்ரி அப்துல் காதீர், சுற்றுலா அமைச்சராக Tiong King Sing ஆகியோர் பொறுப்பு வகிக்க்விருக்கின்றனர்.
தொடர்பு இலக்கவியல் அமைச்சராக பாஹ்மி பட்சில், கல்வியமைச்சராக பட்லீனா சீடேக், ஒற்றுமை அமைச்சராக அகோ அனாக் டாகாங் , சமய விவகார அமைச்சராக மொஹமட் நாய்ம் ஹஜி மொக்தார், சுகாதார அமைச்சராக சலிஹா முஸ்தாஃபா , சபா, சரவா விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர்களக : அர்மீசான் மொஹமட் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

பிரதமர் அன்வார் தலைமையிலான இந்த புதிய அமைச்சரவையில் , ஒரு செனட்டர் உட்பட பி.கே.ஆர் கட்சியிலிருந்து 8 பேர், ஒரு செனட்டர் உட்பட அம்னோவின் சார்பில் எழுவர், டி.ஏ. பி சார்பில் நால்வர், parti Pesaka bumiputera சார்பில் மூவரும், அமானா சார்பில் இருவர் , கட்சி சார்பற்ற ஒருவர், Bersatu sabah சார்பில் ஒருவர், Parti rakyar Sarawak சார்பில் ஒருவர், Parti Demokratik progresif சார்பில் ஒருவர், UPKO கட்சி சார்பில் ஒருவர் , ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்கள் அனைவரும் நாளை மதியம் மணி 3-க்கு பேரரசர் முன்னிலையில் பதவியேற்கவிருக்கின்றனர்.
இந்நிலையில் , துணையமைச்சர்களுக்கான விபரங்கள் பின்னர் வெளியிடப்படுமென, இன்று இரவு மணி 8. 15-க்கு நேரலை யாக உரையாற்றிய டத்தோ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!