
கோலாலம்பூர், மார்ச் 21 – நிந்தனை சட்டத்தை இப்போதைக்கு ரத்துச் செய்யும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லையென சட்டம் மற்றும் அமைப்புகள் சீரமைப்புக்கான துணையமைச்சர் Ramkarpal singh தெரிவித்திருக்கிறார். இதற்கான சாத்தியம் இல்லையென்று நாங்கள் கூறமுடியாது.
அதேவேளையில் அந்த சட்டத்தில் சில சீரமைப்புகளை செய்யலாம் என்றும் அவர் கூறினார். நிந்தனை சட்டம் சுதந்திரமான பேச்சுரிமையை தடுப்பதோடு அவை தவறாக பயன்படுத்தப்படும் சாத்தியம் இருக்கிறது.
அந்த அடிப்படையில்தான் காலம் கடந்த அந்த சட்டங்களை மறுஆய்வு அல்லது ரத்துச் செய்யப்படும் என தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் Pakatan Harapan வாக்குறுதி அளித்திருந்தது.