Latestமலேசியா

பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்ட முதல் நாளே குழந்தை மரணமடைந்த சோகம்

ஷா ஆலாம், மார்ச்-5 சிலாங்கூர், ஷா ஆலாமில், குழந்தைப் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்ட முதல் நாளே, பால் தொண்டையில் சிக்கி, 3 மாதக் குழந்தை உயிரிழந்தது.

“பெற்றோர் வேலைக்குச் செல்வதால், இன்று தான் முதன் முறையாக பேரப்பிள்ளையை அம்மையத்திற்கு அனுப்பினோம். அங்குள்ள குழந்தைப் பராமரிப்பாளர்கள் அனைவரும் நன்குப் பயிற்சிப் பெற்றவர்கள், குழந்தைப் பராமரிப்பில் அனுபமிக்கவர்கள் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டதால் தான், நம்பி அனுப்பினோம். ஆனால் முதல் நாளே பேரப்பிள்ளையைப் பறிகொடுப்போம் என நினைக்கவில்லை” என குழந்தையின் தாத்தா சோகத்துடன் கூறினார்.

காலை எட்டரை மணிக்கு அங்கு விட்டு வந்த குழந்தை, பத்தரை மணிக்கெல்லாம் உயிரிழந்ததாக அழைப்பு வந்ததாக அவர் சொன்னார்.

திடீரென மூர்ச்சையானதை அடுத்து அருகில் உள்ள கிளினிக்குற்குக் கொண்டுச் சென்ற போது, அது பால் தொண்டையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாக குழந்தைப் பராமரிப்பாளர் கூறியிருக்கிறார்.

ஆனால், சுயநினைவற்ற நிலையில் பேரப்பிள்ளை சுமார் 20 நிமிடங்களுக்குக் கவிழ்ந்துப் படுத்திருப்பது காலை 9.40 மணி வரை CCTV கேமராவில் பதிவாகியிருக்கிறது.

எனினும், 10 மணிக்கு மேல் CCTV-யில் பதிவான காட்சிகள் தங்களிடம் இல்லை என்று பராமரிப்பு மையம் கை விரித்து விட்டது; அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை என தாத்தா கூறினார்.

“ குடும்பத்தாருக்கு முதலில் தெரிவிக்காமல், குழந்தையை கிளினிக்கிற்குக் கொண்டுச் சென்றது ஏன்? அம்மையத்தில் அப்படி என்ன தான் நடந்தது ? “ என தாத்தா மேலும் சந்தேகத்தைக் எழுப்பினார்.

“அம்மையம் மன்னிப்புக் கேட்டு விட்டது; ஆனால் எங்களுக்கு அதில் திருப்தி இல்லை. பராமரிப்பாளர் உண்மையிலேயே கவனமாக இருந்திருந்தால், குழந்தையைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு இருந்தது CCTV பதிவைப் பார்த்தாலே தெரிகிறது” என்றார் அவர்.

‘ குழந்தையைத் தூக்கும் போது, அதன் உடல் முழுவதும் பால் கொட்டிக் கிடந்தது. என் முதல் பேரப்பிள்ளைக்கு இந்த கதியா? நாங்கள் நோய்வாய்ப்பட்ட குழந்தையை அனுப்பவில்லை. மாறாக முழு ஆரோக்கியமான குழந்தையையே அனுப்பினோம்” என அவர் சோகத்துடன் கூறினார்.

குழந்தை மரணமடைந்ததற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய, ஷா ஆலம் மருத்துவனையில் சவப்பரிசோதை நடைபெற்று வருவதாகவும், அனைத்தும் முடிந்ததும் அடக்கம் செய்யப்பட ஏதுவாக கிளந்தானுக்குக் கொண்டுச் செல்லப்படும் என்றும் தாத்தா சொன்னார்.

குழந்தைப் பராமரிப்பாளரின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் என்ற பேரில், சிறார் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!