
பட்டர்வெர்த், ஆக 25 – உலகின் மிக உயரமான இடமாக கருதப்படும் இந்தியாவின் Ladak கில் நின்றுகொண்டே 1,400 கிலோமீட்டர் தூரத்திற்கு தனியாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்லும் சாகச சாதனையில் மலேசியாவின் 60 வயது டத்தோஸ்ரீ P. நடராஜன் ஈடுபடவிருக்கிறார்.
இம்மாதம் 31 ஆம் தேதி நாட்டின் 66ஆவது தேசிய தினம் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு அவர் இந்த சாதனையை புரியவுள்ளார் பினாங்கைச் சேர்ந்தவரான இவர்.
சவால் நிறைந்த செயலாக இந்த நடவடிக்கை இருந்தாலும் திட்டமிட்டபடி தாம் அந்த சாதனையை செய்ய முடியும் என நடராஜான் நம்பிக்கை கொண்டுள்ளார்.