கீவ், பிப் 28 – பெலரஸ் நாட்டில் நடைபெறும் அமைதி பேச்சுக்களில் பங்கேற்பதற்கு உக்ரைய்ன் முன்வந்துள்ளது. ஆனால் அந்த பேச்சுக்கள் நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ‘ Volodymyr Zelesky வலியுறுத்தினார்.
பெலரஸ் நாட்டிற்கு ரஷ்ய அரசதந்திர குழு சென்றடைந்துள்ளதாக பி.பி.சி தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைய்ன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சு வார்த்தைக்கு தயார் என ஏற்கனவே ரஷ்யா அதிபர் Vladimir Putin அறிவித்திருந்தார்.
இதனிடையே உலக நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் உக்ரைய்ன் அதிபர் தெரிவித்தார். உக்ரைய்ன் ஆக்கிரமிப்புக்கு ரஷ்யா பதில் சொல்லியே ஆக வேண்டும் என அவர் கூறினார்.