
புத்ராஜெயா, மே 21- Malaysia@Heart (MyHeart) என்ற புதிய முயற்சி மக்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் உயர் நிபுணத்துவம் பெற்ற வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் தாயகம் திரும்புகின்றனர் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் இன்று தெரிவித்தார். அறிவார்ந்த மலேசியர்கள் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து விட்டனர். இவர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைத்து வர மலேசிய இதயம் எனப்படும் MyHeart புதிய முயற்சி கைகொடுக்கிறது என்றார் அவர்.
TalentCorp மூலம் மனிதவள அமைச்சு இளம் வேலை வாய்ப்பு மாணவர்கள் திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. மொத்தம் 2,407 பங்கேற்பாளர்கள் ஏப்ரல் 2023 வரை இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இதுதவிர்த்து TVET பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தையும் மனிதவள அமைச்சு வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
தொழில் நுட்பத் துறையில் பயிலும் மாணவர்களுக்கு தொழில் கல்வியை கற்றுத் தரும் முதலாளிகளுக்கு உதவும் வகையில் ஊக்கத்தொகையாக மூன்று மாதங்களுக்கு 600 வெள்ளியும் வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.