
நிபோங் தெபால்; செப் 10 – வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், பினாங்கு நிபோங் தெபால் அருகே, 6 வாகனங்களை உட்படுத்திய விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அறுவர் காயத்திற்கு உள்ளாயினர்.
மேலும் 14 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில், சம்பந்தப்பட்ட வாகனங்களில் ஒன்றான மரக்கட்டைகளை ஏற்றியிருந்த ட்ரேய்லர் லாரி கவிழ்ந்ததில் சாலையை மறித்தது. இதனால் 3 மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இவ்விபத்தில் ட்ரேய்லர் லாரியில் இருந்த இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.