
சீனா, அக் 4 – சீனாவில், ஆடவர் ஒருவர் 19,000 RMB அல்லது 12 ஆயிரத்து 400 ரிங்கிட் கொடுத்து மெத்தை ஒன்றை வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Zhejiang மாநிலத்திலுள்ள, மெத்தை கடைக்கு சென்ற அவ்வாடவர், தமக்கு பிடித்த அம்மெத்தையில் படுத்தார். அது மிகவும் வசதியாக இருந்ததால், அவர் அப்படியே உறங்கிவிட்டார்.
குரட்டை சத்தத்தோடு அவர் அயர்ந்து உறங்கும் காணொளி Weibo சமூக அகப்பக்கத்தில் பரவலாக பகிரப்படும் வேளை, இதுவரை 40 லட்சம் பேர் அதனை கண்டு களித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆடவர் அசதியால் அயர்ந்து உறங்குவதை கண்ட மெத்தை கடை பணியாளர், விளக்குகளை அனைத்ததோடு, சம்பந்தப்பட்ட ஆடவர் மீது போர்வையையும் கொண்டு போர்த்தியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து துயில் களைந்து எழுந்த அந்த ஆடவர், தமக்கு நிம்மதியான உறக்கத்தை தந்த அந்த மெத்தையை வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கான காணொளியை இங்கே பார்க்கவும்:
Facebook: https://fb.watch/fXRSNxlsJX/