Latestஉலகம்

விண்ணில் பாய்ச்சப்பட்ட வேகத்தில் வெடித்துச் சிதறிய ஜப்பானிய தனியார் ராக்கெட்

தோக்யோ, மார்ச்-13 – ஜப்பானிய தனியார் நிறுவனம் ‘Space One’-னுக்குச் சொந்தமான ராக்கெட், இன்று காலை பாய்ச்சப்பட்ட சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியது.

மேற்கு ஜப்பானின் ‘Wakayama’ மாநிலத்தில் உள்ள ஏவு தள பாதையிலேயே, 18 மீட்டர் நீளம் கொண்ட அந்த கைரோஸ் ராக்கெட் வெடித்தது.

அது பாய்ச்சப்பட்ட போது, அந்நாட்டரசின் சிறிய ரக சோதனைத் துணைக்கோளை அது ஏற்றியிருந்தது.

வெடித்துச் சிதறிய ராக்கெட்டின் உடைந்த பாகங்கள், அங்குள்ள பள்ளத்தில் விழுந்தன.

ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் காண அங்கு நூற்றுக்கணக்கில் கூடியிருந்தவர்கள் இதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தத் தோல்வி, துணைக்கோளத்தைப் பாய்ச்சும் சந்தையில் ஊடுருவும் ஜப்பானின் முயற்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மாற்று சாதனங்களுக்கான பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் இந்த கைரோஸ் ராக்கெட்டை பாய்ச்சும் திட்டத்தை ‘Space One’ ஏற்கனவே ஐந்து முறை தள்ளிப் போட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!