Latestமலேசியா

நியாயமற்ற முறையில் ஆட்குறைப்பு; ஏர் ஆசியாx இன் முன்னாள் விமானிக்கு RM511,200 இழப்பீடு

கோலாலம்பூர், ஜன 7 – ஆட்குறைப்பு செயல்முறை நியாயமற்று என தீர்மானித்த பிறகு முன்னாள் விமானிக்கு 511,200 ரிங்கிட் இழப்பீடு வழங்கும்படி AirAsia X நிறுவனத்திற்கு தொழில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

AirAsia X பெர்ஹாட்டிற்கு எதிராக கடந்த வாரம் தொழில்துறை நீதிமன்றத் தலைவர் D. பரமலிங்கம் ( Paramalingam ) தீர்ப்பு வழங்கியதை அடுத்து Wong Zi Chuang என்ற அந்த விமானிக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

தொழில் நல்லிணக்கத்திற்கான நடத்தை விதிகளின் கீழ் விமான நிறுவனம் ( Last in , First Out ) லாஸ்ட்-இன், ஃபர்ஸ்ட்-அவுட்’ (LIFO) கோட்பாட்டிலிருந்து விலகி, அதற்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவுகள் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது என பரமலிங்கம் தீர்ப்பளித்தார்.

அந்த நிறுவனத்தின் முடிவு சட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லையென்பதால் பாதிக்கப்பட்ட விமானிக்கு 511,200 ரிங்கிட் இழப்பீடு வழங்கப்படுகிறது.

பெரும்பாலான விமானங்களை தரையிறக்கும் நடமாட்ட கட்டுப்பாட்டு இயக்க உத்தரவை அரசாங்கம் அமல்படுத்திய சிறிது நேரத்திலேயே, ஜூன் 2020 இல் வோங் பணிநீக்கம் செய்யப்பட்டபோது, ​​ அவரது நிலைப்பாட்டை உண்மையாகவே தேவையற்றது என்பதை நிரூபிக்க AirAsia X தவறிவிட்டது என்று நீதிமன்றம் கண்டறிந்தது.

வோங்கின் பணிநீக்கம் நல்ல நம்பிக்கையுடன் நடத்தப்படவில்லை என்பதோடு அந்த முடிவுக்கு நியாயமான காரணமும் இல்லையென தொழில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 18,000 ரிங்கிட் மாதச் சம்பளத்துடன் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் விமான சேவையில் பணியாற்றிய வோங்கிற்கு, மீண்டும் பணியமர்த்தப்பட்டதற்கான இழப்பீடாக 198,000 ரிங்கிட் மற்றும் பின்தேதியிடப்பட்ட சம்பளமாக 432,000 ரிங்கிட் வழங்கும்படியும் தொழில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!