சிரம்பான், பிப் 7 – மலேசிய நியுசிலாந்து எனும் அடைமொழியைப் பெற்ற சிரம்பானிலுள்ள Temiang- pantai சாலையின் அவசரப் பாதையில் வேண்டுமென்றே வாகனங்களை நிறுத்தியவர்களுக்கு எதிராக, நெகிரி செம்பிலான் போக்குவரத்து அமலாக்க விசாரணைப் பிரிவு இதுவரை 48 சாலை குற்றப் பதிவுகளை வெளியிட்டுள்ளது.
அழகிய இயற்கை அழகை கொண்டிருக்கும் அப்பகுதியில் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும், நேரத்தைப் போக்கவும் சிலர் அந்த அவசரப் பாதையில் வாகனங்களை நிறுத்தி வைப்பதாக, நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் Datuk Mohamad Mat Yusop தெரிவித்தார்.
அப்பகுதியில் புகைப்படம் எடுக்க பொது மக்களுக்கு தடையில்லை. எனினும் வாகனங்களை அவசரப் பாதையில் நிறுத்தாமல் புல் பாதையில் ஓரமாக நிறுத்தி வைக்கலாமென அவர் கூறினார்.