Latest
நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு

நியூசிலாந்து, ஜன 25 – ஜசிந்தா ஆர்டெர்னுக்கு பதிலாக நியூசிலாந்தின் புதிய பிரதமராக, 44 வயது கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார்.
கடந்த ஐந்தாண்டுகளாக நியூசிலாந்து பிரதமராக பதவியேற்றிருந்த ஜசிந்தா கடந்த வாரம் தமது பதவி விலகலை அறிவித்தார்.
அதனை தொடர்ந்து புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் கிறிஸ், இது தமக்கு கிடைத்த மிகவும் அபூர்வமான வாய்ப்பு என குறிப்பிட்டார்.
இயற்கை சீற்றங்கள், தீவிரவாத தாக்குதல்கள், கோவிட்-19 பெருந் தொற்று என தொடர் சவால்களுக்கு மத்தியில் நியூசிலாந்தை வழிநடத்தி வந்த ஜசிந்தா, தொடர்ந்து போராட தமக்கு சக்தி இல்லை என கடந்த வாரம் கூறியிருந்தார்.