
வெல்லிங்டன் , மார்ச் 16 – நியூசிலாந்தில் Kermadec தீவுகள் வட்டாரத்தில் ரெக்டர் கருவியில் 7.1 அளவில் பதிவான நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைச் தொடர்ந்து அந்த தீவு பிரதேசத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் நியூசிலாந்து பெருநிலத்திற்கு சுனாமி மிரட்டல் இல்லையென தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான சேதம் குறித்து எந்தவொரு தகவலும் இன்னும் தெரியவில்லை.