
சிலாங்கூர், கிள்ளானிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றில், கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அந்நிய நாட்டு பெண்களின் நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்தது.
உளவு நடவடிக்கையின் வாயிலாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் அந்த சோதனையை மேற்கொண்டனர்.
அதன் வாயிலாக, உள்நாட்டவர்கள் அந்நிய பெண்கள் என 11 பேர் கைதுச் செய்யப்பட்டதை, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஸ்ரீ ஆயுப் கான் மைடின் பிச்சை உறுதிப்படுத்தினார்.
அவர்களிடமிருந்து ஆணுறைகள், உடம்பு பிடிக்கு பயன்படுத்தப்படும் திரவங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியின் ஏழாவது மாடியில் செயல்பட்டு வந்த அந்த ஒழுங்கீன மையம், முன்பதிவு அடிப்படையில் நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவையை வழங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.