Latestமலேசியா

விழாக்காலத்தில் விமான டிக்கெட் விலை உயர்வை தடுக்க ஊக்குவிப்பு வழங்க போக்குவரத்து அமைச்சு பரிந்துரை

கூச்சிங், நவ 17 – விழாக்காலத்தின்போது விமான டிக்கெட்டுகள் அதிகரிப்பதால் ஊக்குவிப்பை அறிமுகப்படுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சு பரிந்துரை செய்துள்ளதாக அதன் துணையமைச்சர் ஹஸ்பி ஹபிபுல்லாஹ் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் விழாக்காலத்தின்போது விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிப்பதால் குறிப்பாக சபா மற்றும் சரவாக்கில் வசிப்பவர்கள் கவலை அடைவதை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது என அவர் கூறினார். ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சியடைவதால் விமானங்களுக்கான எண்ணெய்க்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதும் விமான டிக்கெட் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக ஹஸ்பி கூறினார்.

இப்பிரச்னைக்கு ஒரே தீர்வாக விழாக்காலத்தில் ஊக்குவிப்பு சலுகை அடிப்படையில் விமான டிக்கெட்டுகளின் விலையை நிர்ணயிக்காலாம் என அவர் கூறினார். மாணவர்கள் தங்களது கிராமத்திற்கு செல்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அடுத்த ஆண்டில் விமான டிக்கெட்டிற்கான ஊக்குவிப்பு சலுகை தொடரப்படும் என்றும் ஹஸ்பி தெரிவித்தார். சபா, சரவா மற்றும் லபுவான் ஆகிய இடத்தைச் சேர்ந்த 60,000 மாணவர்கள் உயர்க்கல்வி பயில்வதால் அடுத்த ஆண்டும் மாணவர்களுக் ஊக்குவிப்பு சலுகையில் விமான டிக்கெட் தொடரப்படும் என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!