Latestமலேசியா

நிரந்தர வைப்புத் தொகை கணக்கிலிருந்து 24. 2 மில்லியன் ரிங்கிட் மீட்பு; சந்தேகப் பேர்வழிகள் 100,000 ரிங்கிட் முதல் 240,000 ரிங்கிட்வரை கமிஷன் பெற்றனர்

கோலாலம்பூர், ஜூன் 22 – சபா கோத்தா கினபாலுவிலுள்ள வங்கியில் பல்வேறு வைப்பைத் தொகை கணக்கிலிருந்து 24.2 மில்லியன் ரிங்கிட் மோசடியில் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் 100,000 ரிங்கிட் முதல் 240,000 ரிங்கிட்வரை கமிஷன் பெற்றுள்ளனர். வங்கி ஊழியர் ஒருவரிடம் அணுக்கமான நட்புறவைக் கொண்ட உள்நாட்டு பெண் ஒருவர் ஆகக்கடைசியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்வழி இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட நபர் ஒருவர் பண மீட்பு நடவடிக்கைக்காக அடையாளக் கார்டுகள் மற்றும் கைரேகை போன்றவற்றை போலியாக தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்ததாக அவர் கூறினார்.

இந்த மோசடியில் பின்னணியாக இருந்த முக்கிய நபர் இவ்வாண்டு தொடக்கத்தில் மற்றொரு வங்கியிலிருந்து 551,000 ரிங்கிட்டை மீட்பதிலும் வெற்றி பெற்றுள்ளார். அந்த மோசடி விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக ரம்லி கூறினார். கைதான நபர்களிடமிருந்து இதுவரை பல்வேறு வகைகளைக் கொண்ட 9 வாகனங்கள், 1.93 மில்லியன் ரிங்கிட் ரொக்கத் தொகை, கை தொலைபேசிகள், ஏடிஎம் கார்டுகள் , நகைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைக்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!