
கோலாலம்பூர், நவ 16 – உள்நாட்டு விமான நிறுவனங்கள் சரியான திட்டமிட்ட நேரத்தில் புறப்படுவது மற்றும் வந்து சேர்வதை உறுதிப்படுத்த KPI அடைவு நிலை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்திருக்கிறார். விமான நிறுவனங்கள் சரியான திட்டமிட்ட நேரத்தில் செயல்படுவதை கண்டறிவதற்காக தற்போது அடைவு நிலை நடைமுறையை அமல்படுத்துவதற்கு ‘Mavcom’ எனப்படும் மலேசிய விமான ஆணையம் ஈடுபட்டு வருவதாகவும் 2024ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் இது குறித்த நடவடிக்கை முழுமையடையும் என அவர் நாடாளுமன்றத்தில் கூறினார். நாட்டிலுள்ள விமான நிறுவனங்களை நடத்திவருவோர் விமான பயணங்களை ரத்துச் செய்யும் போக்கை மிகவும் குறைந்த விழுக்காட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் ‘Mavcom’ ஆராய்ந்து வருவதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.