
கோலாலம்பூர், டிச 31 – தனது பள்ளிக்கூட ஆசியராகவும், மருத்துவராகவும் நடித்த ஆடவனிடம், 14 வயது மாணவி தனது நிர்வாணப் படங்களை அனுப்பி வைத்து ஏமாந்துள்ளதாக நம்பப்படுகிறது. தன்னை மருத்துவராக அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த ஆடவன், சிலாங்கூரைச் சேர்ந்த அந்த மாணவியை டெலிகிராம் செயலியின் மூலம் தொடர்பு கொண்டுள்ளான்.
தனது பள்ளிக்கூட ஆசிரியரைத் தெரியுமெனவும் கூறிக் கொண்ட அவன் மீது எந்த சந்தேகமும் எழாததை அடுத்து , அந்த மாணவி மருத்துவ நோக்கத்துக்காக, நிர்வாணமாக இருக்கும் தனது உடலை படம் பிடித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அம்மாணவியின் ஆசிரியர் என கூறிக் கொண்டு, வீடியோவைப் பதிவு செய்து அனுப்பும்படி அந்த ஆடவன் கேட்டுக் கொண்டுள்ளான்.
எனினும் , அந்த மாணவியின் பெற்றோருக்கு அந்த விஷயம் தெரிய வர அச்செயலைத் தடுத்திருக்கின்றனர்.