கோலாலம்பூர், மே 2 – Bandar Baru Petaling , Jalan Radin Bagus 1 இல் நிர்வாண
நிலையில் முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்ட ஆடவன் குறித்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து அவனை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை மணி 12. 54 அளவில் x வளைத்தளத்தில் அந்த ஆடவனின் காணொளி வெளியானதை தொடர்நது அவனை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Brickfields மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Ku Masharman Ku Mahmood தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான போலீசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1995ஆம் ஆண்டின் சிறு குற்றங்கள் சட்டத்தின் 14 ஆவது பிரிவின் கிழ் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 509ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.