
கோலாலம்பூர், மே 11 – Selayang , Jalan Selayang Baru வில் வர்த்தக மையத்திற்கு முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இரத்த வெள்ளத்தில் 70 வயதுடைய ஆடவர் ஒருவர் கொலைசெய்யப்பட்டது தொடர்பில் சந்தேகப் பேர்வழி ஒருவரை போலீசார் கைது செய்தனர். 40 வயதுடைய அந்த சந்தேக நபர் நேற்று மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கோம்பாக் போலீஸ் தலைவர் Zainal Mohamed தெரிவித்தார். விசாரணைக்கு உதவியாக அந்த நபர் ஏழு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். பச்சை நிற புரோடுவா கஞ்சில் காரில் செய்வாய்க்கிழமை காலை மணி 10.15 அளவில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக பொதுமக்களிடமிருந்து போலீஸ் தகவலைப் பெற்றதாக Zainal கூறினார். அவரது கழுத்தில் காயங்கள் இருந்ததோடு அக்காருக்குள் கூர்மையான ஆயுதம் ஒன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக Zainal வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.