
சிப்பாங், ஜன 29 – மது அருந்தியதாக சந்தேகப்படும் ஓட்டுனர் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்களில் தமது Porsche காரை கொண்டு மோதியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். IOI City Mall Vallet கார் நிறுத்தும் பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக Sepang OCPD துணை கமிஷனர் Wan Kamarul Azran wan Yusuf தெரிவித்தார். Putrajaya Le Meridien ஹோட்டலிலிருந்து செராஸிற்கு சென்ற அந்த கார் ஓட்டுனர் தமது காரை சாலை தடுப்பில் மோதியபின் கட்டுப்பாட்டை இழந்து இதர மூன்று கார்களில் மீது மோதியுள்ளார். சேதமடைந்த அந்த கார்களின் உரிமையாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதோடு நான்காவது காரின் உரிமையாளரிடம் தொடர்புகொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக Wan Kamarul தெரிவித்துள்ளார்.