
கோலாலம்பூர், ஜன 27 – ஷா அலாமிற்கு செல்லும் NKVE நெடுஞ்சாலையின் 16.1 ஆவது கிலோமீட்டரில் அவசர தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரோட்டோன் ஜென் காரில் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மரணம் அடைந்தார். அந்த விபத்தில் கடுமையாக காயம் அடைந்த 54 வயதுடைய ஆடவர் உடனடியாக சுங்கைபூலோ ண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டபோது இறந்தார் என பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohamad Fakhrudin Abdul Hamid தெரிவித்தார்.