
பாசீர் சாலாக் , மார்ச் 27 – சாலையின் ஓரத்தில் கேபளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5 டன் லோரியில் எரிவாயு குழாய்களை ஏற்றிச்சென்ற லோரி மோதியதில் அதன் ஓட்டுனர் மாண்டார். அந்த விபத்து பாசீர் சாலாக்கிற்கு அருகே
Sejagop Simpang empat ட்டில் நடைபெற்றது. கடுமையாக காயம் அடைந்த சித்தியவானைச் சேர்ந்த 38 வயதுடைய லோரி ஓட்டுனர் Azmil A.Bakar விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். லோரியின் ஓட்டுனர் பகுதி நொறுங்கிய நிலையில் இருந்ததால் சிறப்புக் கருவியை பயன்படுத்தி அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.